எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – இரண்டு

இரண்டாம் இடம் படிப்பு முதல் விளையாட்டு வரை இரண்டாம் இடம் என்பது சற்று கடினமான இடம்தான். ஒட்டுமொத்த உழைப்பையும் கொடுத்துப் போராடி முதல் இடத்தைத் தவறவிட்டு, இரண்டாம் இடத்தைப் பிடித்தவருக்குப்  பாராட்டுக்களை விட அறிவுரைகள்தான் அதிகம் வந்து சேரும். ஏன் முதல் இடத்தைத் தவறவிட்டீர்கள் என்று எல்லோரும் கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். இத்தனை நாள் உழைத்த உழைப்பே வீணாகிவிட்டது போன்ற மனநிலைக்குக் கொண்டு வந்து விடுவார்கள் இரண்டாம் இடம் பெற்றவரை. இரண்டாம் இடம் பெற்றவர் மட்டுமல்ல, படிப்போ, விளையாட்டோ,…

தாவாங்கட்டையைத் தொங்க விடும் தகவல்கள்

ஒவ்வொரு நாளும் 80 லட்சம் மின்னல்கள் பூமியைத் தாக்குகின்றன. “மாயி அண்ணன் வந்துருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக” என்றெல்லாம் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காமலே 80 லட்சம் தடவை பூமியை தொட்டுப் பார்க்கிறது அந்த மின்னல். மின்னலையே மிரட்டிப் பார்த்த மாப்பிள்ளை மொக்கைச்சாமி ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் ராய் சல்லிவன் (Roy Sullivan) (கி.பி. 1912 – 1983). ஒன்றல்ல, இரண்டல்ல, அந்த மனிதரை 7 முறை மின்னல் தாக்கியிருக்கிறது. பயப்பட வேண்டாம், நம்ம சல்லிவனுக்கு ஆயுசு…

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – ஒன்று

எண்ணும் எழுத்தும் எண்ணித் துணிக என்று வள்ளுவர் எண்ணத்தைப் பற்றிதான் சொல்லியிருக்கிறார். எண்ணத்துக்கும், எண்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்பது புரியவில்லை. ஆனால், கிராமத்துப் பக்கம், எத்தனைப் பொருட்கள் இருக்கின்றன என்பதை, எத்தனை எண்ணம் இருக்கிறதென்று கேட்பார்கள். நம் மனதில் உதிக்கும் எண்ணமே ஒரு கணக்குதானோ என்று தோன்றுகிறது. தமிழைப் பொதுவாக தமிழ் நெடுங்கணக்கு என்று சொல்வார்கள். அதனால்தானோ என்னவோ, மனதில் உதிக்கும் எண்ணம் என்ற வார்த்தைக்கும் கணித எண்ணுக்கும் இடையே இவ்வளவு வார்த்தை ஒற்றுமை….