மூன்றாம் இடம் நம் பூவுலகில் மூன்றாம் இடத்தைத் தவிர சிறப்பான இடமொன்று இருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால், சூரியக்குடும்பத்தில் நமது பூமியே மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. ஆகையால் மூன்றாம் இடம் என்பது பூமியின் இடத்தைக் குறிக்கும். விளையாட்டிலோ, படிப்பிலோ மூன்றாம் இடம் கிடைத்தால் பூமியை ஒரு காரணம் சொல்லி மூன்றாம் இடம் பெற்றதற்கு பெருமை தேடிக் கொள்ளலாம். தமிழில் சிறுகவிதை முதல் பெரும் காவியம் வரை, துவக்கம் உலகை முன்னிறுத்தி அமைய வேண்டுமென்பது எழுதப்படாத விதி. அது…