வீழ்ந்துவிட்ட மரத்தின் வேர்கள் மண்ணிலிருக்கும் வரை..
வாழ்ந்துகெட்ட இனத்தின் வலிகள் நெஞ்சிலிருக்கும் வரை..
முன்னின்று எதிர்த்த எதிரிகள் வீழும் வரை..
பின்னின்று கருவறுத்த துரோகிகள் சாகும் வரை..
பேச்சின் எதிரொலி காற்றில் கரையும் வரை..
மூச்சின் கடைசித்துளி விண்ணைச் சேரும் வரை..
வையத்தின் கடைசித்துளி கடல் வற்றும் வரை..
மையத்தின் கருந்துளை புவியைக் கவ்வும் வரை..
வாழும் எங்கள் தமிழ்மொழி.. அதுவே எங்கள் உயிர்வழி..
Like this:
Like Loading...
Related
Published by ராஜேஷ் லிங்கதுரை
ராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உனக்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது.
பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். பிறந்ததும் பிழைப்பதும் வேறுவேறு இடம் என்பது சங்ககாலத்தில் இருந்தே தமிழர்களுக்கு பழக்கமான ஒன்றுதான். தற்போதைய உறைவிடம் சென்னை என்றாலும் அதுவும் மாற்றத்துக்கு உட்பட்டதுதான்.
View all posts by ராஜேஷ் லிங்கதுரை