எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று நீ எண்ணிக் குமுறும் வலிகள் அனைத்தும், நீ எண்ணுவதை விட பலமடங்காக பல கோடிபேருக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்த பூமியில். எப்போதும் சிரித்த முகமாகத் தென்படும் உனது நண்பர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் அழுவதற்கு ஆயிரம் காரணங்கள் புதைந்து கிடக்கத்தான் செய்கிறது. இதுவல்லவோ வாழ்க்கை என்று நீ வியந்து பார்க்கும் எல்லோருக்குமே, நாம் ஏன் வாழ்கிறோம் என்ற விரக்தி அவ்வப்போது எட்டிப் பார்க்காமல் இருந்ததில்லை. இனி வாழவேண்டாமென்ற முடிவுக்கு உன்னைத் தள்ளிய…