இரண்டாம் இடம் படிப்பு முதல் விளையாட்டு வரை இரண்டாம் இடம் என்பது சற்று கடினமான இடம்தான். ஒட்டுமொத்த உழைப்பையும் கொடுத்துப் போராடி முதல் இடத்தைத் தவறவிட்டு, இரண்டாம் இடத்தைப் பிடித்தவருக்குப் பாராட்டுக்களை விட அறிவுரைகள்தான் அதிகம் வந்து சேரும். ஏன் முதல் இடத்தைத் தவறவிட்டீர்கள் என்று எல்லோரும் கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். இத்தனை நாள் உழைத்த உழைப்பே வீணாகிவிட்டது போன்ற மனநிலைக்குக் கொண்டு வந்து விடுவார்கள் இரண்டாம் இடம் பெற்றவரை. இரண்டாம் இடம் பெற்றவர் மட்டுமல்ல, படிப்போ, விளையாட்டோ,…
Author: ராஜேஷ் லிங்கதுரை
தாவாங்கட்டையைத் தொங்க விடும் தகவல்கள்
ஒவ்வொரு நாளும் 80 லட்சம் மின்னல்கள் பூமியைத் தாக்குகின்றன. “மாயி அண்ணன் வந்துருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக” என்றெல்லாம் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காமலே 80 லட்சம் தடவை பூமியை தொட்டுப் பார்க்கிறது அந்த மின்னல். மின்னலையே மிரட்டிப் பார்த்த மாப்பிள்ளை மொக்கைச்சாமி ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் ராய் சல்லிவன் (Roy Sullivan) (கி.பி. 1912 – 1983). ஒன்றல்ல, இரண்டல்ல, அந்த மனிதரை 7 முறை மின்னல் தாக்கியிருக்கிறது. பயப்பட வேண்டாம், நம்ம சல்லிவனுக்கு ஆயுசு…
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – ஒன்று
எண்ணும் எழுத்தும் எண்ணித் துணிக என்று வள்ளுவர் எண்ணத்தைப் பற்றிதான் சொல்லியிருக்கிறார். எண்ணத்துக்கும், எண்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்பது புரியவில்லை. ஆனால், கிராமத்துப் பக்கம், எத்தனைப் பொருட்கள் இருக்கின்றன என்பதை, எத்தனை எண்ணம் இருக்கிறதென்று கேட்பார்கள். நம் மனதில் உதிக்கும் எண்ணமே ஒரு கணக்குதானோ என்று தோன்றுகிறது. தமிழைப் பொதுவாக தமிழ் நெடுங்கணக்கு என்று சொல்வார்கள். அதனால்தானோ என்னவோ, மனதில் உதிக்கும் எண்ணம் என்ற வார்த்தைக்கும் கணித எண்ணுக்கும் இடையே இவ்வளவு வார்த்தை ஒற்றுமை….
பட்டாம்பூச்சியில் ஏன் பாகுபாடு
ஆண்குழந்தைகள் விதிவிலக்கல்ல நம் சமூகத்தில், பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு சமூகக் குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. அது கட்டாயத் தேவையும் கூட. உயர்ந்த பண்பாடு, கலாச்சாரம் கொண்டவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் நாடுகளில் கூட பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள் என்பது அருவெறுப்பான உண்மை. சினிமாக்களில் குத்துப்பாடல்களில் அரைகுறையாக ஆட விடுவதில் துவங்கி, விளையாட்டு மைதானங்களில் உற்சாகமூட்டும் பெண்கள் என்று கீழ்த்தரமான ஆடைகளுடன் ஆட விடுவது வரை பெண்களை ஒரு போதைப் பொருள்போல பயன்படுத்தும் அவலம் இன்றும்…
யார்/எது கடவுள்?
கடவுள் இல்லை யார் கடவுள்? என்ற கட்டுரையின் முதல் தலைப்பை கடவுள் இல்லை என்று தொடங்குவது சிறப்பாக இருக்குமென்று நினைக்கிறேன். இது ஒட்டுமொத்தமாக கடவுள் மறுப்பு என்ற நிலையில் இருந்து உதிர்ந்த சொல்லன்று. நான் இந்த உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் சுட்டிக்காட்டும் கடவுளை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஒருவர் இருப்பதாகவும் நம்பவில்லை. அதனால்தான் இந்த ஏடாகூடமான தலைப்பு. அப்படியானால் யார் கடவுள்? மீண்டும் அந்த விடையறியா சரித்திரக் கேள்வி நம் மீது கணையாகப் பாய்கிறது. பொதுவாக…
இந்து மதமும் தமிழர் சமயமும்
இந்து என்னும் காந்தம் இந்து என்ற வார்த்தை, நாம் நினைப்பது போல் ராமாயணம், மகாபாரதம், ரிக் வேதம் போன்ற நூல்களில் கண்டெடுக்கப்பட்ட வார்த்தையல்ல. இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வார்த்தையுமல்ல. இவ்வளவு ஏன், 200 ஆண்டுகளுக்கு முன் அது ஒரு மதத்தைக் குறிக்கும் சொல் கூட இல்லையென்பது பெரும்பாலான இந்தியர்களுக்கே அதிச்சியான தகவல்தான். இன்று, இந்து மதம்தான் இந்தியாவில் பெரும்பான்மையான மதம்; இந்தியா என்ற பெயரே இந்து என்ற பெயர் போலதான் தோன்றுகிறது. ஆனால் இந்து என்ற வார்த்தை நம்…
மக்கள் மறந்த முதல் மகாத்மா
துரத்தியடிக்கப்பட்ட மகாத்மா அந்த வாலிபன் தனது நண்பனின் திருமண விழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனிடம் பகட்டான ஆடைகள் கிடையாது, ஆனால் மனம் நிறைய அன்பு மட்டும் இருந்தது. அந்தத் திருமணத்துக்கு அவன் போவது அவன் தந்தைக்கு சற்றுப் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது, இருந்தாலும் அவனிடம் வெளிக்காட்ட விரும்பவில்லை. திருமணத்திற்குக் கட்டாயம் போகவேண்டுமா என்று கேட்டார். நண்பன் விருப்பப்பட்டு அழைத்ததாகவும், போகவில்லையென்றால் அவன் வருத்தப்படுவான் என்று சொல்லி விட்டு அவன் திருமணத்துக்குக் கிளம்பி விட்டான். திருமண வீட்டு வாசலில் அவன்…
சமஸ்கிருதம் என்னும் பிச்சைப்பாத்திரம்
எழுத்துக்கள் இல்லாத மொழி “பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றார் பாரதி. பெற்ற தாயுடன், தாய்மொழியையும் சேர்த்துக் கொள்ளலாம், தாய்மொழி என்பது அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. தற்போது இந்தியாவில் பலநூறு மொழிகள் வழக்கில் இருந்தாலும், சில நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்றால் அவற்றின் எண்ணிக்கை மளமளவென்று குறைந்துவிடும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்ற மொழிகள் மிகவும் குறைவு. அவற்றில் முதன்மையானவை தமிழ் மற்றும் பிராகிருதம் (Prakrit)….
பெற்றோர்களின் கவனத்திற்கு
குழந்தைகள் உலகம் ஒரு குழந்தை பிறக்கும்போது அதனுடன் பெற்றோர்களும் பிறக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை. குழந்தைக்கு எப்படி இந்த உலகம் புதிதோ, அதேபோல பெற்றோர்களுக்கும் குழந்தைகள் உலகம் என்பது புதிதுதான். வளரும் குழந்தைகள் எளிதாக நமது உலகுக்குள் அடியெடுத்து வைத்து அதற்குள் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வளர்ந்துவிட்ட பல பெற்றோர்களால் குழந்தைகள் உலகத்துக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லை. இந்த இரண்டு உலகங்களும் இணையும் இடத்தில்தான் தரமான தலைமுறைகள் உருவாக முடியும். குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொண்ட பெற்றோர்களிடம்…
பூங்காச் செடிகள்
அளந்து வைத்த உயரம்… ஆர்ப்பரிக்கும் அழகு… திரும்பிப் பார்க்கத் தோன்றும் பரவசம்… இவை பூங்காவில் வளர்க்கப்பட்ட செடிகள்… கண்ணைப் பறிக்கும் கைப்பேசி… உள்ளம் கவரும் உடைகள்.. எல்லாத் துறைகளையும் எட்டிப்பார்க்க வைக்கும் மிடுக்கு… நுனிநாக்கு ஆங்கிலம்… இவர் மென்பொருள் பொறியாளர்… பூங்காச்செடிகளும் மென்பொருள் பொறியாளனும் ஒருவகையில் ஒன்றுதான். இரண்டு பேரும் வளர்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
தண்ணீருக்குள் கரைந்திருக்கும் அரசியல்
நீர் மூலம் ரிஷிமூலம், நதிமூலம் இரண்டும் கேட்கக் கூடாதென்று சொல்வார்கள். வேறு வழியில்லை நாம் இப்போது கேட்டுதான் ஆகவேண்டும். நமது பூமியை செயற்கைக்கோளிலிருந்து பார்த்தால் பூமியில் எங்கும் நீர் நிறைந்திருப்பது போலதான் தோன்றும். அது உண்மைதான். ஆனால் அது கடல் நீர், அள்ளிப்பருகினால் வாய் ஓரங்கட்டும். கடல் நீரையும் சேர்த்து நமது பூமியில் உள்ள மொத்த நீரின் அளவை விஞ்ஞானிகள் விஜயகாந்த் போல புள்ளிவிவரமாக பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அந்த புள்ளிவிவரத்தை சற்று பார்க்கலாம். நமது பூமிப்பந்தில் ஒட்டிக்கொண்டிருக்கும்…
தனையனுடன் பிறந்த தந்தை
உன் முதல் அழுகுரலில் ஆர்ப்பரித்தது நெஞ்சம் – ஏனோ என் முகத்தில் உணர்ச்சிகளுக்குத்தான் சற்று பஞ்சம் உளமார்ந்த அன்பிற்கு நான் பழையவன் – அதை வெளிக்காட்டுவதில் கொஞ்சம் புதியவன் கொஞ்சும் மொழிகள் நான் அறிந்ததில்லை – ஆனால் நெஞ்சம் உனை ஒருநொடி மறந்ததில்லை இறுக்கமான முகத்துக்குள் முறுக்கி வைத்த மீசையும் உண்டு – மீசைக்குள்ளே உருக்கமான உள்ளமும் உண்டு உள்ளத்தின் ஆழத்தில் அன்புக்கு எல்லையில்லை – ஏனோ உதடுகள் உச்சரித்துப் பழகியதில்லை பிறந்து விட்டாய் நீ என்றறிந்ததும்…
தண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி
உருட்டி வைத்த மைதா மாவு அது ஒரு கனாக்காலம். அதாவது இந்தியா, அண்டார்டிகா மற்றும் ஆப்ரிக்காவோடு கட்டித்தழுவி இறுக்கமாக இருந்த காலம். சில டைனோசர்கள் மட்டும் பார்த்த நிலப்பரப்பு அது. புரியவில்லை அல்லவா. நாம் ஒரு கொசுவத்தியையோ, நின்று கொண்டிருக்கும் மிதிவண்டியின் சக்கரங்களையோ உற்று நோக்கினால் நாம் வரலாற்றில் பின்னோக்கிப் பயணிக்கிறோம் என்று அர்த்தம். தமிழ்த்திரைப்படங்களின் கலாச்சாரப்படி நமக்கு பழைய காலத்துக்கு செல்வதற்கு கொசுவத்தி ஒரு இன்றிமையாத பொருள். நமக்கு சற்று பெரிய அளவில் தேவைப்படும். ஏனென்றால்…
கற்பாறையின் மேல் தூவப்பட்ட விதை
கற்பாறையின் மேல் தூவப்பட்ட விதை நான். பருவமழைக்குக் காத்திருந்து பயனில்லை. என் வேர்கள் பாறையைத் துளைத்தாக வேண்டும்.
தொல்காப்பியத்தில் அறிவியல்
இலக்கணத்தையும் தாண்டி தொல்காப்பியம் இலக்கண நூல் என்பது உலகத்தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. இலக்கணம் என்பதையும் தாண்டி வாழ்வியல், அறிவியல் போன்ற பல சமூக விதிகளைத் தொட்டிருக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை. தொல்காப்பியம் காட்டும் அறிவியல் சிலவற்றை இங்கு கூற விரும்புகிறேன். அறிவியலுக்குள் நுழையும் முன்பு தொல்காப்பியம் குறித்து ஒரு சிறு முன்னுரை மட்டும். போரடிக்கும் முன் நிறுத்தி விடலாம். கவலை வேண்டாம். சுருக்கமாக விறு விறு தொல்காப்பியம் தொல்காப்பியம் மொத்தம் 3 அதிகாரங்களைக் கொண்டது. அதிகாரம் என்றால்…
மூன்று சாட்டைகள்
சாதிச்சேற்றில் நித்தம் உழன்று வீதிதோறும் சங்கம் வளர்த்த சாதியப்பேய்களுக்கு ஒரு சாட்டை. மதம் பிடித்து சமயம் பார்த்து பிற சமயம் அறுக்கத்துடிக்கும் மதயானைகளுக்கு ஒரு சாட்டை. ஊர்ப்பணத்தை ஏய்த்துத் தின்று ஊன் வளர்க்கும் அரசியல்பேதிகளுக்கு ஒரு சாட்டை. இந்த மூன்று சாக்கடைகளில் நம் கால்பட நேர்ந்தாலும் நம்மையும் தோலுரிக்கட்டும் இந்த சாட்டை.
Corporate தாய்
ஆயா முகத்தில் நீ கண்விழிக்க… அலுவலக வாசலில் நான் இருப்பேன்… தூக்கி உனைக்கொஞ்சிட கனவுடன் நான் வருவேன்… தூக்கத்திற்கு இரவில் அழுது கொண்டு நீ இருப்பாய்…. உறங்கும் நேரம் மட்டும் உனை நான் ரசிக்கிறேன்… உன்விழிகள் கலங்கும்போது கைப்பேசியில் தாலாட்டுகிறேன்… தேம்பி அழ தாய்மடி என்றும் கிடைத்தது எனக்கு… தாய்ப்பாலும் புட்டிப்பாலாய் மாறிப்போனது உனக்கு… தவறி நான் விழுந்துவிட்டால் பதறிப்போய் வாரியணைப்பாள் என் அன்னை… முதல் அடி எடுத்து நீ வைத்ததை புகைப்படத்தில் நான் பார்த்தேன் உன்னை……
வலைத்தளத்தில் விசைப்பலகையின் முதல் பக்கம்
உலகின் முதல் உயிருக்கு என்றைக்கு செவிகள் பிறந்ததோ அன்றே மொழியின் முதற்கூறு மூளையில் உருவாகியிருக்க வேண்டும். காதில் கேட்ட ஒலியை வாயால் கூற முயற்சித்தது மிருகங்களின் சத்தமாகவோ பறவைகளின் சத்தமாகவோதான் இருக்க வேண்டும். எதிரில் இருக்கும்போது சுட்டிக்காட்ட விரல்கள் போதுமானது. அதனைக் கண்டிராத ஒருவனுக்கு விளக்க வேண்டியத் தேவை வரும்போது சித்திரம் தேவைப்படுகிறது. அன்றுதான் எழுத்தின் முதல் அச்சு பதிக்கப்பட்டிருக்க வேண்டும். மொழி ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. அந்த ஆதிமனிதன் வரைந்த முதல் சித்திரம்தான் உலகின் மொழிகளுக்கெல்லாம்…
திராவிடம் என்னும் சங்கேதம்
சங்கேதம் சில வார்த்தைகளோ, சொற்றொடரோ பெரும்பாலான மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்கள். தமிழில் அதனை சங்கேதம் என்பார்கள். அது பொதுவாக ராணுவத் தகவல்களை மர்மமாக வைக்க உதவும். அதுபோன்ற மர்மங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு சங்கேதம் உண்டென்றால் அது திராவிடம்தான். எங்கோ விழுந்த சில முடிச்சுகள் ஒரு நூற்கண்டையே குழப்பிவிடுவது போல, வரலாற்றில் சில முடிச்சுகள், உண்மையைத் திரித்து, மறைத்து விடுவதுண்டு. இது திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டாயம் பொருந்தும். அதை…