தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்

தமிழை மறந்து போன தமிழர்களுக்கு, பச்சைத்தமிழனின் கடிதம். மடல் என்ற வார்த்தையைப் பயன்படுத்த சிறு தயக்கம். ஏனென்றால், சங்க காலத்தில் மடலேறுதல் என்பது காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணிடம் ஊரறிய பகிரங்கமாக தனது காதலை சொல்வதற்கு பயன்படுத்தும் ஒரு செயல். அது ஐந்திணை ஒழுக்கத்தில் வராது, அதனால் மடல் என்பதை விட கடிதம் என்ற வார்த்தையைக்  குறிப்பிட விரும்புகிறேன். இது தாய்த்தமிழை நேசிப்பவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமல்ல என்பதையும் பதிவு செய்கிறேன். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீங்கள் யாரும் தமிழன் கட்டிய கோயிலில்,…

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – நான்கு

நான்கு நீங்கள் நாலும் தெரிந்தவரா? என்று ஒரு மனிதரின் அறிவுக்கு சவால் விடும் வேலையை நான்கு என்ற எண்தான் துவக்கி வைக்கிறது. கோடிக்கணக்கில் தெரிந்தவரா என்று கேட்டால் கூட, பல புத்தகங்களை கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டவர் போலிருக்கிறது என்று நினைத்து ஆச்சர்யப்படலாம். எவ்வளவோ எண்கள் இருந்தும், ஏன் நாலும் தெரிந்தவரா என்று கேட்கிறார்கள்? இந்த கேள்விக்கு, நான்கு தொடர்பான தகவல்களைத் திரட்டும்போது மனதில் தோன்றிய பதிலை சொல்கிறேன். அந்த பதில் சரிதானா என்ற முடிவை உங்களிடமே…

வாக்குத் தவறானால்?

தனது வாழ்நாளில் அன்றுதான் கடைசிநாள் என்பதை உணராமல் அவன் நாட்டியத்தைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தான். அவன் ரசிப்பது நாட்டியத்தையா அல்லது நடன மங்கைகளையா என்ற கோபம் அவன் மனைவிக்கு. தனிமையில் இருந்திருந்தால் தவறைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கலாம். ஆனால் நாடாளும் அரசனை அவை முன்னிலையில் எவ்வாறு கடிந்துகொள்வது? தான் கோபத்திலிருக்கிறேன் என்றுணர்த்த விருட்டென்று எழுந்து சென்றாள் அவள். கோப்பெருந்தேவி கோபப்பெருந்தேவி ஆனாள். அவள் விருட்டென்று போனதும் சுருக்கென்று புத்தியில் உரைத்தது அவனுக்கு. இல்லாளின் உள்ளம் குளிரச்செய்யும் வழியறியாது அரியணை என்னும்…

தண்ணீருக்குள் கரைந்திருக்கும் அரசியல்

நீர் மூலம் ரிஷிமூலம், நதிமூலம் இரண்டும் கேட்கக் கூடாதென்று சொல்வார்கள். வேறு வழியில்லை நாம் இப்போது கேட்டுதான் ஆகவேண்டும். நமது பூமியை செயற்கைக்கோளிலிருந்து பார்த்தால் பூமியில் எங்கும் நீர் நிறைந்திருப்பது போலதான் தோன்றும். அது உண்மைதான். ஆனால் அது கடல் நீர், அள்ளிப்பருகினால் வாய் ஓரங்கட்டும். கடல் நீரையும் சேர்த்து நமது பூமியில் உள்ள மொத்த நீரின் அளவை விஞ்ஞானிகள் விஜயகாந்த் போல புள்ளிவிவரமாக பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அந்த புள்ளிவிவரத்தை சற்று பார்க்கலாம். நமது பூமிப்பந்தில் ஒட்டிக்கொண்டிருக்கும்…

திராவிடம் என்னும் சங்கேதம்

சங்கேதம் சில வார்த்தைகளோ, சொற்றொடரோ பெரும்பாலான மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்கள். தமிழில் அதனை சங்கேதம் என்பார்கள். அது பொதுவாக ராணுவத் தகவல்களை மர்மமாக வைக்க உதவும். அதுபோன்ற மர்மங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு சங்கேதம் உண்டென்றால் அது திராவிடம்தான். எங்கோ விழுந்த சில முடிச்சுகள் ஒரு நூற்கண்டையே குழப்பிவிடுவது போல, வரலாற்றில் சில முடிச்சுகள், உண்மையைத் திரித்து, மறைத்து விடுவதுண்டு. இது திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டாயம் பொருந்தும். அதை…