மூன்றாம் இடம் நம் பூவுலகில் மூன்றாம் இடத்தைத் தவிர சிறப்பான இடமொன்று இருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால், சூரியக்குடும்பத்தில் நமது பூமியே மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. ஆகையால் மூன்றாம் இடம் என்பது பூமியின் இடத்தைக் குறிக்கும். விளையாட்டிலோ, படிப்பிலோ மூன்றாம் இடம் கிடைத்தால் பூமியை ஒரு காரணம் சொல்லி மூன்றாம் இடம் பெற்றதற்கு பெருமை தேடிக் கொள்ளலாம். தமிழில் சிறுகவிதை முதல் பெரும் காவியம் வரை, துவக்கம் உலகை முன்னிறுத்தி அமைய வேண்டுமென்பது எழுதப்படாத விதி. அது…
Category: இலக்கியம்
பழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும்
1) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல. இங்கு அரசன் என்பது அரசமரத்தைக் குறிக்கும். பொதுவாகப் பெண்கள் குழந்தைப் பேறு வேண்டி அரசமரத்தை சுற்றுவது வழக்கம். அரசமரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. என்னதான் நம்பிக்கையுடன் அரசமரத்தை சுற்றினாலும், கணவனை சுற்றி வந்தால்தானே குழந்தை பிறக்கும். கணவனை சுற்றாமல், அரசமரத்தைச் சுற்றுவதில் ஒரு பயனில்லை என்பதை உணர்த்தச் சொல்லப்பட்டதுதான் இந்தப் பழமொழி. “அரசனை நம்பி, கட்டியக் கணவனைக் கைவிட்டுப் போனவள்” என்று ஒரு இழிவான தகவலைப்…
முப்பாட்டன் வள்ளுவனின் கருத்தியல் தொகுப்பு
அறம் என்னும் பாட்டன் வீட்டு சொத்து உலகப் பொதுமறை திருக்குறள், இரண்டு வரிகளுக்குள் அடங்கி விடும் வார்த்தைத் தொகுப்பு அல்ல. வாழ்வின் எந்த சூழ்நிலையில் இருக்கும்போது படித்தாலும், அந்த சூழ்நிலைக்கேற்ற விடையைத் தரும் அட்சய பாத்திரம். உலகப் பொதுமறை என்றாலும் அது என் பாட்டன் வீட்டு சொத்து என்ற உரிமையில் திருக்குறள் உலகத்துக்குள் நுழைய முற்படுகிறேன். திருக்குறளின் மையக்கருத்து எது என்று நாம் மேடை போட்டுச் சொல்ல வேண்டியதில்லை. மூன்றாம் வகுப்பில் முதன்முதலாகத் திருக்குறளைப் படிக்கத் துவங்கிய…
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – இரண்டு
இரண்டாம் இடம் படிப்பு முதல் விளையாட்டு வரை இரண்டாம் இடம் என்பது சற்று கடினமான இடம்தான். ஒட்டுமொத்த உழைப்பையும் கொடுத்துப் போராடி முதல் இடத்தைத் தவறவிட்டு, இரண்டாம் இடத்தைப் பிடித்தவருக்குப் பாராட்டுக்களை விட அறிவுரைகள்தான் அதிகம் வந்து சேரும். ஏன் முதல் இடத்தைத் தவறவிட்டீர்கள் என்று எல்லோரும் கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். இத்தனை நாள் உழைத்த உழைப்பே வீணாகிவிட்டது போன்ற மனநிலைக்குக் கொண்டு வந்து விடுவார்கள் இரண்டாம் இடம் பெற்றவரை. இரண்டாம் இடம் பெற்றவர் மட்டுமல்ல, படிப்போ, விளையாட்டோ,…
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – ஒன்று
எண்ணும் எழுத்தும் எண்ணித் துணிக என்று வள்ளுவர் எண்ணத்தைப் பற்றிதான் சொல்லியிருக்கிறார். எண்ணத்துக்கும், எண்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்பது புரியவில்லை. ஆனால், கிராமத்துப் பக்கம், எத்தனைப் பொருட்கள் இருக்கின்றன என்பதை, எத்தனை எண்ணம் இருக்கிறதென்று கேட்பார்கள். நம் மனதில் உதிக்கும் எண்ணமே ஒரு கணக்குதானோ என்று தோன்றுகிறது. தமிழைப் பொதுவாக தமிழ் நெடுங்கணக்கு என்று சொல்வார்கள். அதனால்தானோ என்னவோ, மனதில் உதிக்கும் எண்ணம் என்ற வார்த்தைக்கும் கணித எண்ணுக்கும் இடையே இவ்வளவு வார்த்தை ஒற்றுமை….
தொல்காப்பியத்தில் அறிவியல்
இலக்கணத்தையும் தாண்டி தொல்காப்பியம் இலக்கண நூல் என்பது உலகத்தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. இலக்கணம் என்பதையும் தாண்டி வாழ்வியல், அறிவியல் போன்ற பல சமூக விதிகளைத் தொட்டிருக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை. தொல்காப்பியம் காட்டும் அறிவியல் சிலவற்றை இங்கு கூற விரும்புகிறேன். அறிவியலுக்குள் நுழையும் முன்பு தொல்காப்பியம் குறித்து ஒரு சிறு முன்னுரை மட்டும். போரடிக்கும் முன் நிறுத்தி விடலாம். கவலை வேண்டாம். சுருக்கமாக விறு விறு தொல்காப்பியம் தொல்காப்பியம் மொத்தம் 3 அதிகாரங்களைக் கொண்டது. அதிகாரம் என்றால்…