உன் வாக்கு ஒன்றே மாறுதல்

வந்தாரை வாழவைத்து நீமட்டும் வீழ்ந்தாய் – நம்தாய்மண்ணின் தமையர்தமை தரக்குறைவு செய்தாய் செய்ததெல்லாம் தவறென்று இன்றாவது உணர்வாய் – வீண்சாதிமத பேதம் விட்டு ஓரினமாய் இணைவாய் இணைந்த பின்பு இத்தரணியில் எதிரியேது உனக்கு – இனிபணிந்து நிற்கும் ஏழுலகும் தமிழர்தம் வாளுக்கு வாளெடுத்து வீழ்ந்ததில்லை என்றும் நம்மினமே – பெரும்தோளெடுத்து பொங்கியெழு பகைவர் அஞ்சிடவே அஞ்சுவதால் நாமடைந்த நன்மையேதும் இலையே – கண்துஞ்ச மறு தாய்நிலத்தின் விடுதலையைப் பெறவே பெற்ற மண்ணைப் பறிக்க வந்த பகைவரைக் கருவறுப்போம்…

நான்

நான் என்பது தனிமனிதனல்ல, சமுதாயத்தின் ஓர் அங்கம். சமுதாயம் என்பது மக்கள்தொகையல்ல, அறவோர் வாழும் கூட்டமைப்பு. அறம் என்பது சட்டதிட்டமல்ல, மனதளவில் தூய்மையாய் வாழ்தல்.  மனம் என்பது மூளையின் பரிணாமமல்ல, ஐம்புலன்களின் கட்டுப்பாடு.  ஐம்புலன்கள் என்பது சுகங்களை நுகர்வதற்கல்ல, இயற்கையின் இயல்பை உணர்ந்து போற்றுவதற்கு. இயற்கை என்பது நம் தலைமுறை மட்டும் வாழ்ந்து தீர்ப்பதற்கல்ல, வருங்காலத்தை வாழவைப்பது.  வருங்காலம் என்பது கனவல்ல, நிகழ்காலத்தின் தொடர்ச்சி.  நிகழ்காலம் என்பது நிகழ்வுகளின் தொகுப்பல்ல, சந்ததிகளின் தலையழுத்து. தலையெழுத்து என்பது விதிக்கப்பட்டதல்ல,…

தூத்துக்குடிக்காரன் காதல் கவிதை

பையப்பைய மனசுக்குள்ள நொழஞ்சி என் கையைப்பிடிச்சவளே… செரட்டயப்போல என் காதலையும் பொரட்டிப் போட்டவளே… அங்குட்டும் இங்குட்டும் அலைஞ்ச என்ன எங்குட்டும் போவாம கட்டிப்போட்டவளே.. தார்சா உள்ள மொடங்கிக் கெடந்தவன.. ராசா மாதிரி ஊர சுத்த வச்சவளே… சென்னியப் பேத்தாலும் சும்மா இருந்தவன இன்னைக்கு வெண்ணியக் குடிக்க வச்சிட்டடி.. ஏல மக்கான்னு கூப்பிட்டவன எல்லாம் ஏம்ல இப்படின்னு பண்றான்னு கேக்க வச்ச.. கெழக்கால போற கெழடுகட்ட கூட வடக்காம போவயில வாயாற திட்ட வச்ச… பாம்பக் கண்டாலும் பயிராத…

பூங்காச் செடிகள்

அளந்து வைத்த உயரம்… ஆர்ப்பரிக்கும் அழகு… திரும்பிப் பார்க்கத் தோன்றும் பரவசம்… இவை பூங்காவில் வளர்க்கப்பட்ட செடிகள்… கண்ணைப் பறிக்கும் கைப்பேசி… உள்ளம் கவரும் உடைகள்.. எல்லாத் துறைகளையும் எட்டிப்பார்க்க வைக்கும் மிடுக்கு… நுனிநாக்கு ஆங்கிலம்… இவர் மென்பொருள் பொறியாளர்… பூங்காச்செடிகளும் மென்பொருள் பொறியாளனும் ஒருவகையில் ஒன்றுதான். இரண்டு பேரும் வளர்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

தனையனுடன் பிறந்த தந்தை

உன்  முதல் அழுகுரலில் ஆர்ப்பரித்தது நெஞ்சம் – ஏனோ என் முகத்தில் உணர்ச்சிகளுக்குத்தான் சற்று பஞ்சம் உளமார்ந்த அன்பிற்கு நான் பழையவன் – அதை வெளிக்காட்டுவதில் கொஞ்சம் புதியவன் கொஞ்சும் மொழிகள் நான் அறிந்ததில்லை – ஆனால் நெஞ்சம் உனை ஒருநொடி மறந்ததில்லை இறுக்கமான முகத்துக்குள் முறுக்கி வைத்த மீசையும் உண்டு – மீசைக்குள்ளே உருக்கமான உள்ளமும் உண்டு உள்ளத்தின் ஆழத்தில் அன்புக்கு எல்லையில்லை – ஏனோ உதடுகள் உச்சரித்துப் பழகியதில்லை பிறந்து விட்டாய் நீ என்றறிந்ததும்…

மூன்று சாட்டைகள்

சாதிச்சேற்றில் நித்தம் உழன்று வீதிதோறும் சங்கம் வளர்த்த சாதியப்பேய்களுக்கு ஒரு சாட்டை. மதம் பிடித்து சமயம் பார்த்து பிற சமயம் அறுக்கத்துடிக்கும் மதயானைகளுக்கு ஒரு சாட்டை. ஊர்ப்பணத்தை ஏய்த்துத் தின்று ஊன் வளர்க்கும் அரசியல்பேதிகளுக்கு ஒரு சாட்டை. இந்த மூன்று சாக்கடைகளில் நம் கால்பட நேர்ந்தாலும் நம்மையும் தோலுரிக்கட்டும் இந்த சாட்டை.

Corporate தாய்

ஆயா முகத்தில் நீ கண்விழிக்க… அலுவலக வாசலில் நான் இருப்பேன்… தூக்கி உனைக்கொஞ்சிட கனவுடன் நான் வருவேன்… தூக்கத்திற்கு இரவில் அழுது கொண்டு நீ இருப்பாய்…. உறங்கும் நேரம் மட்டும் உனை நான் ரசிக்கிறேன்… உன்விழிகள் கலங்கும்போது கைப்பேசியில் தாலாட்டுகிறேன்… தேம்பி அழ தாய்மடி என்றும் கிடைத்தது எனக்கு… தாய்ப்பாலும் புட்டிப்பாலாய் மாறிப்போனது உனக்கு… தவறி நான் விழுந்துவிட்டால் பதறிப்போய் வாரியணைப்பாள் என் அன்னை… முதல் அடி எடுத்து நீ வைத்ததை புகைப்படத்தில் நான் பார்த்தேன் உன்னை……