வழக்கமாக, திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனை, எனக்கும் இந்த படத்துக்கும் தொடர்பே இல்லை என்பது போன்ற பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வார்த்தைகளை, ஒவ்வொரு திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். அதற்கு மாறாக “இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள், கதைக்களம், சம்பவங்கள் அனைத்துக்கும் படக்குழுவினரே பொறுப்பு” என்று முதல் திரையிலே நமது புருவங்களை உயரச்செய்த படக்குழுவினருக்கு பாராட்டுகள். தெருக்கூத்துக் கலைஞர்கள், தமிழினத்தலைவர் பிரபாகரனின் வரலாற்றைச் சொல்வதுபோல திரைப்படத்தை அமைத்திருப்பது மிகச்சிறப்பு. தெருக்கூத்து என்றாலே, ராமாயணம், மகாபாரதம் போன்ற வடக்கத்திய கதைகளை மட்டும் பெரும்பாலும்…
Category: வரலாறு
மேதகு
அவர் காலடிகளில் காத்துக்கிடந்த பதவிகள் அத்தனை. நினைத்திருந்தால், உலகின் அனைத்துவித சுகங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவந்து குவித்துவிடும் அளவுக்கு செல்வச்செழிப்போடு வாழ்ந்திருக்க முடியும். பெற்ற பிள்ளைகளை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க வைத்திருக்க முடியும். மனைவியோடும், பிள்ளைகளோடும் மாடமாளிகையில் காலம் கழித்திருக்க முடியும். ஆனால், காடுதான் பெரும்பாலும் அவருக்கு வீடாக இருந்தது. பிறந்த நாட்டின் விடுதலை நெருப்பு ஒன்றே அவர் நெஞ்சில் பற்றி எரிந்தது. முதுகுக்குப் பின்னால் இந்தியா என்ற மாபெரும் துரோகத்தை சுமந்து கொண்டு, முகத்துக்கு…
தமிழர்களின் அடிமை வாழ்வு – பாகம் 2
முதல் பாகத்தின் தொடர்ச்சி தமிழர்கள் எவ்வாறு அடிமை செய்யப்பட்டார்கள் என்ற ஆய்வின் இரண்டாவது கட்டுரை இது. சங்ககாலம் முதல் பல்லவர்கள் நுழைவு வரை முதல் பாகத்தில் ஆராயப்பட்டது. இரண்டாம் பாகத்தில் ஆறாம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்று நிகழ்வுகள் ஆராயப்பட இருக்கின்றன. கிட்டத்தட்ட 1200 ஆண்டு வரலாற்றை சில பக்கங்களுக்குள் அடக்கி விட முடியுமா என்ற வியப்பு பலர் கண்முன்னே விரிந்து நிற்குமென்று நம்புகிறேன். ஆனால் தமிழர்களின் வாழ்வை அடியோடு புரட்டிப்போட்ட சில நிகழ்வுகளை…
தமிழர்களின் அடிமை வரலாறு – பாகம் 1
வரலாறு தனது வரலாற்றை மறந்த இனம் வளமுடன் வாழாது. தாய்மொழியைத் துறந்த இனம் அடிமைப்பட்டுப் போகும். உலகில் அடிமைப்பட்டுக் கிடக்கும் எந்த ஒரு இனத்தின் பின்னனியை ஆராய்ந்து பார்த்தாலும், நமக்கு இரண்டு தகவல்கள் நிச்சயம் கிடைக்கும். ஒன்று, அந்த இனத்தின் தாய்மொழி அழிக்கப்பட்டிருக்கும், இன்னொன்று அவர்களின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர் அந்த இனம் மெல்லமெல்ல அடிமைத்தளையில் சிக்குண்டு சீரழிந்து போகும். இதுபோன்ற சீரழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இனங்களில் ஒன்று தமிழினம். உலகின் பிற இனங்கள், விலங்குகளை வேட்டையாட கையில்…
தமிழர்களின் ஒற்றுமை
ஒற்றைப் புள்ளி மனிதகுல வரலாற்றில் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்ததற்கான தடயங்கள் மிகக் குறைவு. இது தமிழர்களின் முகத்தில் ஓங்கி அறைவது போன்ற உணர்வென்றாலும், அதுதான் உண்மை. தமிழர்களை எப்போதும் பிரித்து வைக்க சாதிமதங்கள் தன் பங்கைப் பெரிதாய் ஆற்றியிருக்கின்றன. இந்த கட்டுரையில் இரண்டு வரலாற்று சம்பந்தவங்களை அலசி அதன் பின்னணியில், எது தமிழர்களை இணைத்தது என்று ஆராய விழைகிறேன். இது போன்று தமிழர்கள் ஒன்றிணைந்த பிற தரவுகளை உற்றுநோக்கினாலும், தமிழர்களை இணைத்தது ஒரேயொரு புள்ளிதான் என்பது விளங்கும்….
சம்பிரதாயங்களும் சினிமாப் பாடல்களும்
நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் என்று அனைத்துக்குமே நாம் சில சடங்குகள், சம்பிரதாயங்களைப் பின்பற்றுவோம். அந்த சடங்குகள் வரிசையில் காலப்போக்கில் பல புதிய பழக்கங்கள் இணைந்துகொள்வது இயல்பு. அந்த வகையில் திருமணம், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில், சில குறிப்பிட்ட திரைப்படப் பாடல்கள் இடம்பெறுவதுண்டு. எனது ஊர் முள்ளக்காடு, தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் கிராமம். எனது கிராமத்தில், இது போன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம்பெறும் சில பாடல்களை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இது எனது ஊரில் மட்டுமல்லாது, அந்த வட்டாரத்தில்…
மக்கள் மறந்த முதல் மகாத்மா
துரத்தியடிக்கப்பட்ட மகாத்மா அந்த வாலிபன் தனது நண்பனின் திருமண விழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனிடம் பகட்டான ஆடைகள் கிடையாது, ஆனால் மனம் நிறைய அன்பு மட்டும் இருந்தது. அந்தத் திருமணத்துக்கு அவன் போவது அவன் தந்தைக்கு சற்றுப் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது, இருந்தாலும் அவனிடம் வெளிக்காட்ட விரும்பவில்லை. திருமணத்திற்குக் கட்டாயம் போகவேண்டுமா என்று கேட்டார். நண்பன் விருப்பப்பட்டு அழைத்ததாகவும், போகவில்லையென்றால் அவன் வருத்தப்படுவான் என்று சொல்லி விட்டு அவன் திருமணத்துக்குக் கிளம்பி விட்டான். திருமண வீட்டு வாசலில் அவன்…
தண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி
உருட்டி வைத்த மைதா மாவு அது ஒரு கனாக்காலம். அதாவது இந்தியா, அண்டார்டிகா மற்றும் ஆப்ரிக்காவோடு கட்டித்தழுவி இறுக்கமாக இருந்த காலம். சில டைனோசர்கள் மட்டும் பார்த்த நிலப்பரப்பு அது. புரியவில்லை அல்லவா. நாம் ஒரு கொசுவத்தியையோ, நின்று கொண்டிருக்கும் மிதிவண்டியின் சக்கரங்களையோ உற்று நோக்கினால் நாம் வரலாற்றில் பின்னோக்கிப் பயணிக்கிறோம் என்று அர்த்தம். தமிழ்த்திரைப்படங்களின் கலாச்சாரப்படி நமக்கு பழைய காலத்துக்கு செல்வதற்கு கொசுவத்தி ஒரு இன்றிமையாத பொருள். நமக்கு சற்று பெரிய அளவில் தேவைப்படும். ஏனென்றால்…