எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று நீ எண்ணிக் குமுறும் வலிகள் அனைத்தும், நீ எண்ணுவதை விட பலமடங்காக பல கோடிபேருக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்த பூமியில். எப்போதும் சிரித்த முகமாகத் தென்படும் உனது நண்பர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் அழுவதற்கு ஆயிரம் காரணங்கள் புதைந்து கிடக்கத்தான் செய்கிறது. இதுவல்லவோ வாழ்க்கை என்று நீ வியந்து பார்க்கும் எல்லோருக்குமே, நாம் ஏன் வாழ்கிறோம் என்ற விரக்தி அவ்வப்போது எட்டிப் பார்க்காமல் இருந்ததில்லை. இனி வாழவேண்டாமென்ற முடிவுக்கு உன்னைத் தள்ளிய…
Category: விழிப்புணர்வு
ஏன் கடவுள்?
பெரியாரை விமர்சிப்போம் கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்! கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! என்று பெரியார் சொன்னதை, பகுத்தறிவேயில்லாமல் ஏற்றுக்கொண்டு, பெரியாரைக் கடவுள் போலவே சித்தரிக்க முற்படும் ஒரு கூட்டம் இன்றும் தமிழகத்தில் உண்டு. கூடியவிரைவில் அந்தக்கூட்டம், கடவுள் ஈரோட்டில் பிறந்தார் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனக்கு பெரியார் மீது நிறைய நன்மதிப்பும் உண்டு, நிறைய விமர்சனங்களும் உண்டு. திருவள்ளுவரையே விமர்சனத்தோடு அணுகலாம் என்ற பார்வை கொண்ட தமிழகத்தில், பெரியாரை விமர்சனம் செய்தால்…
பட்டாம்பூச்சியில் ஏன் பாகுபாடு
ஆண்குழந்தைகள் விதிவிலக்கல்ல நம் சமூகத்தில், பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு சமூகக் குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. அது கட்டாயத் தேவையும் கூட. உயர்ந்த பண்பாடு, கலாச்சாரம் கொண்டவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் நாடுகளில் கூட பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள் என்பது அருவெறுப்பான உண்மை. சினிமாக்களில் குத்துப்பாடல்களில் அரைகுறையாக ஆட விடுவதில் துவங்கி, விளையாட்டு மைதானங்களில் உற்சாகமூட்டும் பெண்கள் என்று கீழ்த்தரமான ஆடைகளுடன் ஆட விடுவது வரை பெண்களை ஒரு போதைப் பொருள்போல பயன்படுத்தும் அவலம் இன்றும்…
பெற்றோர்களின் கவனத்திற்கு
குழந்தைகள் உலகம் ஒரு குழந்தை பிறக்கும்போது அதனுடன் பெற்றோர்களும் பிறக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை. குழந்தைக்கு எப்படி இந்த உலகம் புதிதோ, அதேபோல பெற்றோர்களுக்கும் குழந்தைகள் உலகம் என்பது புதிதுதான். வளரும் குழந்தைகள் எளிதாக நமது உலகுக்குள் அடியெடுத்து வைத்து அதற்குள் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வளர்ந்துவிட்ட பல பெற்றோர்களால் குழந்தைகள் உலகத்துக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லை. இந்த இரண்டு உலகங்களும் இணையும் இடத்தில்தான் தரமான தலைமுறைகள் உருவாக முடியும். குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொண்ட பெற்றோர்களிடம்…