தண்ணீருக்குள் கரைந்திருக்கும் அரசியல்

நீர் மூலம் ரிஷிமூலம், நதிமூலம் இரண்டும் கேட்கக் கூடாதென்று சொல்வார்கள். வேறு வழியில்லை நாம் இப்போது கேட்டுதான் ஆகவேண்டும். நமது பூமியை செயற்கைக்கோளிலிருந்து பார்த்தால் பூமியில் எங்கும் நீர் நிறைந்திருப்பது போலதான் தோன்றும். அது உண்மைதான். ஆனால் அது கடல் நீர், அள்ளிப்பருகினால் வாய் ஓரங்கட்டும். கடல் நீரையும் சேர்த்து நமது பூமியில் உள்ள மொத்த நீரின் அளவை விஞ்ஞானிகள் விஜயகாந்த் போல புள்ளிவிவரமாக பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அந்த புள்ளிவிவரத்தை சற்று பார்க்கலாம். நமது பூமிப்பந்தில் ஒட்டிக்கொண்டிருக்கும்…

தனையனுடன் பிறந்த தந்தை

உன் முதல் அழுகுரலில் ஆர்ப்பரித்தது நெஞ்சம் – ஆனால் உணர்ச்சிகளுக்குத்தான் சற்று பஞ்சம். பாசத்திற்கு நான் பழையவன் – அதை வெளிக்காட்டுவதில் கொஞ்சம் புதியவன். கொஞ்சும் மொழிகள் நான் அறிந்ததில்லை – ஆனால் நெஞ்சம் உனை ஒருநொடி மறந்ததில்லை. இறுக்கமான முகத்துக்குள் முறுக்கி வைத்த மீசையும் உண்டு – அதற்குள் உருக்கமான உள்ளமும் உண்டு. உள்ளத்தின் ஆழத்தில் அன்புக்கு எல்லையில்லை – ஏனோ உதடுகள் உச்சரித்துப் பழகியதில்லை. பிறந்து விட்டாய் நீ என்றதும் – ஒரு நொடி…

தண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி

உருட்டி வைத்த மைதா மாவு அது ஒரு கனாக்காலம். அதாவது இந்தியா, அண்டார்டிகா மற்றும் ஆப்ரிக்காவோடு கட்டித்தழுவி இறுக்கமாக இருந்த காலம். சில டைனோசர்கள் மட்டும் பார்த்த நிலப்பரப்பு அது. புரியவில்லை அல்லவா. நாம் ஒரு கொசுவத்தியையோ, நின்று கொண்டிருக்கும் மிதிவண்டியின் சக்கரங்களையோ உற்று நோக்கினால் நாம் வரலாற்றில் பின்னோக்கிப் பயணிக்கிறோம் என்று அர்த்தம். தமிழ்த்திரைப்படங்களின் கலாச்சாரப்படி நமக்கு பழைய காலத்துக்கு செல்வதற்கு கொசுவத்தி ஒரு இன்றிமையாத பொருள். நமக்கு சற்று பெரிய அளவில் தேவைப்படும். ஏனென்றால்…

நான் மதச்சார்பற்றவன்

நான் மதச்சார்பற்றவன் அதற்கு எம்மதமும் சம்மதம் என்று அர்த்தமல்ல. எம்மதமும் சம்மதமில்லை என்று அர்த்தம்.

தொல்காப்பியத்தில் அறிவியல்

இலக்கணத்தையும் தாண்டி தொல்காப்பியம் இலக்கண நூல் என்பது உலகத்தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. இலக்கணம் என்பதையும் தாண்டி வாழ்வியல், அறிவியல் போன்ற பல சமூக விதிகளைத் தொட்டிருக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை. தொல்காப்பியம் காட்டும் அறிவியல் சிலவற்றை இங்கு கூற விரும்புகிறேன். அறிவியலுக்குள் நுழையும் முன்பு தொல்காப்பியம் குறித்து ஒரு சிறு முன்னுரை மட்டும். போரடிக்கும் முன் நிறுத்தி விடலாம். கவலை வேண்டாம். சுருக்கமாக விறு விறு தொல்காப்பியம் தொல்காப்பியம் மொத்தம் 3 அதிகாரங்களைக் கொண்டது. அதிகாரம் என்றால்…

மூன்று சாட்டைகள்

சாதிச்சேற்றில் நித்தம் உழன்று வீதிதோறும் சங்கம் வளர்த்த சாதியப்பேய்களுக்கு ஒரு சாட்டை. மதம் பிடித்து சமயம் பார்த்து பிற சமயம் அறுக்கத்துடிக்கும் மதயானைகளுக்கு ஒரு சாட்டை. ஊர்ப்பணத்தை ஏய்த்துத் தின்று ஊன் வளர்க்கும் அரசியல்பேதிகளுக்கு ஒரு சாட்டை. இந்த மூன்று சாக்கடைகளில் நம் கால்பட நேர்ந்தாலும் நம்மையும் தோலுரிக்கட்டும் இந்த சாட்டை.

Corporate தாய்

ஆயா முகத்தில் நீ கண்விழிக்க… அலுவலக வாசலில் நான் இருப்பேன்… தூக்கி உனைக்கொஞ்சிட கனவுடன் நான் வருவேன்… தூக்கத்திற்கு இரவில் அழுது கொண்டு நீ இருப்பாய்…. உறங்கும் நேரம் மட்டும் உனை நான் ரசிக்கிறேன்… உன்விழிகள் கலங்கும்போது கைப்பேசியில் தாலாட்டுகிறேன்… தேம்பி அழ தாய்மடி என்றும் கிடைத்தது எனக்கு… தாய்ப்பாலும் புட்டிப்பாலாய் மாறிப்போனது உனக்கு… தவறி நான் விழுந்துவிட்டால் பதறிப்போய் வாரியணைப்பாள் என் அன்னை… முதல் அடி எடுத்து நீ வைத்ததை புகைப்படத்தில் நான் பார்த்தேன் உன்னை……

வலைத்தளத்தில் விசைப்பலகையின் முதல் பக்கம்

உலகின் முதல் உயிருக்கு என்றைக்கு செவிகள் பிறந்ததோ அன்றே மொழியின் முதற்கூறு மூளையில் உருவாகியிருக்க வேண்டும். காதில் கேட்ட ஒலியை வாயால் கூற முயற்சித்தது மிருகங்களின் சத்தமாகவோ பறவைகளின் சத்தமாகவோதான் இருக்க வேண்டும். எதிரில் இருக்கும்போது சுட்டிக்காட்ட விரல்கள் போதுமானது. அதனைக் கண்டிராத ஒருவனுக்கு விளக்க வேண்டியத் தேவை வரும்போது சித்திரம் தேவைப்படுகிறது. அன்றுதான் எழுத்தின் முதல் அச்சு பதிக்கப்பட்டிருக்க வேண்டும். மொழி ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. அந்த ஆதிமனிதன் வரைந்த முதல் சித்திரம்தான் உலகின் மொழிகளுக்கெல்லாம்…

திராவிடம் என்னும் சங்கேதம்

சங்கேதம் சில வார்த்தைகளோ, சொற்றொடரோ பெரும்பாலான மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்கள். தமிழில் அதனை சங்கேதம் என்பார்கள். அது பொதுவாக ராணுவத் தகவல்களை மர்மமாக வைக்க உதவும். அதுபோன்ற மர்மங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு சங்கேதம் உண்டென்றால் அது திராவிடம்தான். எங்கோ விழுந்த சில முடிச்சுகள் ஒரு நூற்கண்டையே குழப்பிவிடுவது போல, வரலாற்றில் சில முடிச்சுகள், உண்மையைத் திரித்து, மறைத்து விடுவதுண்டு. இது திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டாயம் பொருந்தும். அதை…

ஓர் இனத்தின் அடையாளம்

சோமாதேவி டூரா, மேரி ஸ்மித் ஜோன்ஸ், டாமி ஜார்ஜ், டாலி பென்ட்ரீத். நாம் வாழ்நாளில் கேட்டறியாத பெயர்கள் இவை. இவர்கள் அனைவரும் சில இனங்களின் ஒட்டுமொத்த அடையாளம் என்றால் நம்ப முடிகிறதா. ஆம். கடைசி அடையாளங்கள். இவர்கள் அனைவரும் அழிந்துபோன சில மொழிகளைப் பேசிய கடைசி மனிதர்கள். அவர்களுக்கு வாரிசே இல்லை என்று அர்த்தம் அல்ல. அந்த வாரிசுகளுக்கு அவர்கள் தாய்மொழி தெரியவில்லை என்று அர்த்தம். ஒட்டுமொத்த உலக மக்களையும் டி.என்.ஏ, நிறம், உருவம், மதம் போன்ற…

மதமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

நடுகல் என்ற முதல் கோயில் இயற்கை வழிபாடுதான் உலகின் முதல் வழிபாடு அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மதத்தின் துவக்கம் என்பது அதுதான். இது எல்லோரும் அறிந்த உண்மைதான். நாம் சற்று முன்னோக்கி செல்வோம். அது மக்கள் குழுவாக வாழத் தொடங்கிய காலம். உணவுக்காகவோ, உறைவிடத்துக்காகவோ, பிற குழுக்களைத் தாக்க வேண்டிய கட்டாயம். அதில் வீரமாக சண்டையிட்ட மனிதர்கள் ஞாபகார்த்தமாக ஒரு கல் நட்டு வைக்கப்படும். அதன் பெயர் நடுகல். அங்கு வாழ்ந்த மக்கள் அந்த…