ஓர் இனத்தின் அடையாளம்

சோமாதேவி டூரா, மேரி ஸ்மித் ஜோன்ஸ், டாமி ஜார்ஜ், டாலி பென்ட்ரீத். நாம் வாழ்நாளில் கேட்டறியாத பெயர்கள் இவை. இவர்கள் அனைவரும் சில இனங்களின் ஒட்டுமொத்த அடையாளம் என்றால் நம்ப முடிகிறதா. ஆம். கடைசி அடையாளங்கள். இவர்கள் அனைவரும் அழிந்துபோன சில மொழிகளைப் பேசிய கடைசி மனிதர்கள். அவர்களுக்கு வாரிசே இல்லை என்று அர்த்தம் அல்ல. அந்த வாரிசுகளுக்கு அவர்கள் தாய்மொழி தெரியவில்லை என்று அர்த்தம். ஒட்டுமொத்த உலக மக்களையும் டி.என்.ஏ, நிறம், உருவம், மதம் போன்ற…

மதமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

நடுகல் என்ற முதல் கோயில் இயற்கை வழிபாடுதான் உலகின் முதல் வழிபாடு, அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மதத்தின் துவக்கம் என்பது அதுதான். இது எல்லோரும் அறிந்த உண்மைதான். நாம் சற்று முன்னோக்கி செல்வோம். அது மக்கள் குழுவாக வாழத் தொடங்கிய காலம். உணவுக்காகவோ, உறைவிடத்துக்காகவோ, பிற குழுக்களைத் தாக்க வேண்டிய கட்டாயம். அதில் வீரமாக சண்டையிட்ட மனிதர்கள் ஞாபகார்த்தமாக ஒரு கல் நட்டு வைக்கப்படும். அதன் பெயர் நடுகல். அங்கு வாழ்ந்த மக்கள் அந்த…