வந்தாரை வாழவைத்து நீமட்டும் வீழ்ந்தாய் – நம்தாய்மண்ணின் தமையர்தமை தரக்குறைவு செய்தாய் செய்ததெல்லாம் தவறென்று இன்றாவது உணர்வாய் – வீண்சாதிமத பேதம் விட்டு ஓரினமாய் இணைவாய் இணைந்த பின்பு இத்தரணியில் எதிரியேது உனக்கு – இனிபணிந்து நிற்கும் ஏழுலகும் தமிழர்தம் வாளுக்கு வாளெடுத்து வீழ்ந்ததில்லை என்றும் நம்மினமே – பெரும்தோளெடுத்து பொங்கியெழு பகைவர் அஞ்சிடவே அஞ்சுவதால் நாமடைந்த நன்மையேதும் இலையே – கண்துஞ்ச மறு தாய்நிலத்தின் விடுதலையைப் பெறவே பெற்ற மண்ணைப் பறிக்க வந்த பகைவரைக் கருவறுப்போம்…
Tag: அரசியல்
தண்ணீருக்குள் கரைந்திருக்கும் அரசியல்
நீர் மூலம் ரிஷிமூலம், நதிமூலம் இரண்டும் கேட்கக் கூடாதென்று சொல்வார்கள். வேறு வழியில்லை நாம் இப்போது கேட்டுதான் ஆகவேண்டும். நமது பூமியை செயற்கைக்கோளிலிருந்து பார்த்தால் பூமியில் எங்கும் நீர் நிறைந்திருப்பது போலதான் தோன்றும். அது உண்மைதான். ஆனால் அது கடல் நீர், அள்ளிப்பருகினால் வாய் ஓரங்கட்டும். கடல் நீரையும் சேர்த்து நமது பூமியில் உள்ள மொத்த நீரின் அளவை விஞ்ஞானிகள் விஜயகாந்த் போல புள்ளிவிவரமாக பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அந்த புள்ளிவிவரத்தை சற்று பார்க்கலாம். நமது பூமிப்பந்தில் ஒட்டிக்கொண்டிருக்கும்…