வரலாறு தனது வரலாற்றை மறந்த இனம் வளமுடன் வாழாது. தாய்மொழியைத் துறந்த இனம் அடிமைப்பட்டுப் போகும். உலகில் அடிமைப்பட்டுக் கிடக்கும் எந்த ஒரு இனத்தின் பின்னனியை ஆராய்ந்து பார்த்தாலும், நமக்கு இரண்டு தகவல்கள் நிச்சயம் கிடைக்கும். ஒன்று, அந்த இனத்தின் தாய்மொழி அழிக்கப்பட்டிருக்கும், இன்னொன்று அவர்களின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர் அந்த இனம் மெல்லமெல்ல அடிமைத்தளையில் சிக்குண்டு சீரழிந்து போகும். இதுபோன்ற சீரழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இனங்களில் ஒன்று தமிழினம். உலகின் பிற இனங்கள், விலங்குகளை வேட்டையாட கையில்…
Tag: ஆரியர்கள்
முப்பாட்டன் வள்ளுவனின் கருத்தியல் தொகுப்பு
அறம் என்னும் பாட்டன் வீட்டு சொத்து உலகப் பொதுமறை திருக்குறள், இரண்டு வரிகளுக்குள் அடங்கி விடும் வார்த்தைத் தொகுப்பு அல்ல. வாழ்வின் எந்த சூழ்நிலையில் இருக்கும்போது படித்தாலும், அந்த சூழ்நிலைக்கேற்ற விடையைத் தரும் அட்சய பாத்திரம். உலகப் பொதுமறை என்றாலும் அது என் பாட்டன் வீட்டு சொத்து என்ற உரிமையில் திருக்குறள் உலகத்துக்குள் நுழைய முற்படுகிறேன். திருக்குறளின் மையக்கருத்து எது என்று நாம் மேடை போட்டுச் சொல்ல வேண்டியதில்லை. மூன்றாம் வகுப்பில் முதன்முதலாகத் திருக்குறளைப் படிக்கத் துவங்கிய…
இந்து மதமும் தமிழர் சமயமும்
இந்து என்னும் காந்தம் இந்து என்ற வார்த்தை, நாம் நினைப்பது போல் ராமாயணம், மகாபாரதம், ரிக் வேதம் போன்ற நூல்களில் கண்டெடுக்கப்பட்ட வார்த்தையல்ல. இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வார்த்தையுமல்ல. இவ்வளவு ஏன், 200 ஆண்டுகளுக்கு முன் அது ஒரு மதத்தைக் குறிக்கும் சொல் கூட இல்லையென்பது பெரும்பாலான இந்தியர்களுக்கே அதிச்சியான தகவல்தான். இன்று, இந்து மதம்தான் இந்தியாவில் பெரும்பான்மையான மதம்; இந்தியா என்ற பெயரே இந்து என்ற பெயர் போலதான் தோன்றுகிறது. ஆனால் இந்து என்ற வார்த்தை நம்…
சமஸ்கிருதம் என்னும் பிச்சைப்பாத்திரம்
எழுத்துக்கள் இல்லாத மொழி “பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றார் பாரதி. பெற்ற தாயுடன், தாய்மொழியையும் சேர்த்துக் கொள்ளலாம், தாய்மொழி என்பது அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. தற்போது இந்தியாவில் பலநூறு மொழிகள் வழக்கில் இருந்தாலும், சில நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்றால் அவற்றின் எண்ணிக்கை மளமளவென்று குறைந்துவிடும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்ற மொழிகள் மிகவும் குறைவு. அவற்றில் முதன்மையானவை தமிழ் மற்றும் பிராகிருதம் (Prakrit)….
திராவிடம் என்னும் சங்கேதம்
சங்கேதம் சில வார்த்தைகளோ, சொற்றொடரோ பெரும்பாலான மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்கள். தமிழில் அதனை சங்கேதம் என்பார்கள். அது பொதுவாக ராணுவத் தகவல்களை மர்மமாக வைக்க உதவும். அதுபோன்ற மர்மங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு சங்கேதம் உண்டென்றால் அது திராவிடம்தான். எங்கோ விழுந்த சில முடிச்சுகள் ஒரு நூற்கண்டையே குழப்பிவிடுவது போல, வரலாற்றில் சில முடிச்சுகள், உண்மையைத் திரித்து, மறைத்து விடுவதுண்டு. இது திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டாயம் பொருந்தும். அதை…