நான்

நான் என்பது தனிமனிதனல்ல, சமுதாயத்தின் ஓர் அங்கம். சமுதாயம் என்பது மக்கள்தொகையல்ல, அறவோர் வாழும் கூட்டமைப்பு. அறம் என்பது சட்டதிட்டமல்ல, மனதளவில் தூய்மையாய் வாழ்தல்.  மனம் என்பது மூளையின் பரிணாமமல்ல, ஐம்புலன்களின் கட்டுப்பாடு.  ஐம்புலன்கள் என்பது சுகங்களை நுகர்வதற்கல்ல, இயற்கையின் இயல்பை உணர்ந்து போற்றுவதற்கு. இயற்கை என்பது நம் தலைமுறை மட்டும் வாழ்ந்து தீர்ப்பதற்கல்ல, வருங்காலத்தை வாழவைப்பது.  வருங்காலம் என்பது கனவல்ல, நிகழ்காலத்தின் தொடர்ச்சி.  நிகழ்காலம் என்பது நிகழ்வுகளின் தொகுப்பல்ல, சந்ததிகளின் தலையழுத்து. தலையெழுத்து என்பது விதிக்கப்பட்டதல்ல,…

யார்/எது கடவுள்?

கடவுள் இல்லை யார் கடவுள்? என்ற கட்டுரையின் முதல் தலைப்பை கடவுள் இல்லை என்று தொடங்குவது சிறப்பாக இருக்குமென்று நினைக்கிறேன். இது ஒட்டுமொத்தமாக கடவுள் மறுப்பு என்ற நிலையில் இருந்து உதிர்ந்த சொல்லன்று. நான் இந்த உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் சுட்டிக்காட்டும்  கடவுளை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஒருவர் இருப்பதாகவும் நம்பவில்லை. அதனால்தான் இந்த ஏடாகூடமான தலைப்பு. அப்படியானால் யார் கடவுள்? மீண்டும் அந்த விடையறியா சரித்திரக் கேள்வி நம் மீது கணையாகப் பாய்கிறது. பொதுவாக…