மிருகம் பாதி மனிதன் பாதி அது அடர்ந்த காடு. புலிகளுக்கும், சிறுத்தைகளும் நடுவில் வாழ வேண்டிய கட்டாயம். பலம் மிக்க விலங்குகளுக்கிடையே, அந்த ஒரு விலங்குக்கூட்டம் மட்டும் பலவீனமாக சுற்றித் திரிந்தது. காட்டுக்குள் வேறெந்த விலங்குகளுக்கும் இல்லாத ஆபத்துகள் அனைத்தும் அந்த விலங்குக் கூட்டத்துக்குக் காத்திருந்தன. ஏன்? அந்த விலங்குக்கு, ஆபத்தென்றால் மான் போல மின்னல் வேகத்தில் ஓடத்தெரியாது, குரங்குகள் போல மரத்துக்கு மரம் துரிதமாகத் தாவத்தெரியாது. குரங்காகவும் இல்லாமல், மனிதனாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் பரிணாம…