ஏன் கடவுள்?

பெரியாரை விமர்சிப்போம்  கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்! கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! என்று பெரியார் சொன்னதை, பகுத்தறிவேயில்லாமல் ஏற்றுக்கொண்டு, பெரியாரைக் கடவுள் போலவே சித்தரிக்க முற்படும் ஒரு கூட்டம் இன்றும் தமிழகத்தில் உண்டு. கூடியவிரைவில் அந்தக்கூட்டம், கடவுள் ஈரோட்டில் பிறந்தார் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனக்கு பெரியார் மீது நிறைய நன்மதிப்பும்  உண்டு, நிறைய விமர்சனங்களும் உண்டு. திருவள்ளுவரையே விமர்சனத்தோடு அணுகலாம் என்ற பார்வை கொண்ட தமிழகத்தில், பெரியாரை விமர்சனம் செய்தால்…

திராவிடம் என்னும் சங்கேதம்

சங்கேதம் சில வார்த்தைகளோ, சொற்றொடரோ பெரும்பாலான மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்கள். தமிழில் அதனை சங்கேதம் என்பார்கள். அது பொதுவாக ராணுவத் தகவல்களை மர்மமாக வைக்க உதவும். அதுபோன்ற மர்மங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு சங்கேதம் உண்டென்றால் அது திராவிடம்தான். எங்கோ விழுந்த சில முடிச்சுகள் ஒரு நூற்கண்டையே குழப்பிவிடுவது போல, வரலாற்றில் சில முடிச்சுகள், உண்மையைத் திரித்து, மறைத்து விடுவதுண்டு. இது திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டாயம் பொருந்தும். அதை…