உயிர்வழி எங்கள் தமிழ்மொழி

வீழ்ந்துவிட்ட மரத்தின் வேர்கள் மண்ணிலிருக்கும் வரை.. வாழ்ந்துகெட்ட இனத்தின் வலிகள் நெஞ்சிலிருக்கும் வரை.. முன்னின்று எதிர்த்த எதிரிகள் வீழும் வரை.. பின்னின்று கருவறுத்த துரோகிகள் சாகும் வரை.. பேச்சின் எதிரொலி காற்றில் கரையும் வரை.. மூச்சின் கடைசித்துளி விண்ணைச் சேரும் வரை.. வையத்தின் கடைசித்துளி கடல் வற்றும் வரை.. மையத்தின் கருந்துளை புவியைக் கவ்வும் வரை.. வாழும் எங்கள் தமிழ்மொழி.. அதுவே எங்கள் உயிர்வழி..

ஓர் இனத்தின் அடையாளம்

சோமாதேவி டூரா, மேரி ஸ்மித் ஜோன்ஸ், டாமி ஜார்ஜ், டாலி பென்ட்ரீத். நாம் வாழ்நாளில் கேட்டறியாத பெயர்கள் இவை. இவர்கள் அனைவரும் சில இனங்களின் ஒட்டுமொத்த அடையாளம் என்றால் நம்ப முடிகிறதா. ஆம். கடைசி அடையாளங்கள். இவர்கள் அனைவரும் அழிந்துபோன சில மொழிகளைப் பேசிய கடைசி மனிதர்கள். அவர்களுக்கு வாரிசே இல்லை என்று அர்த்தம் அல்ல. அந்த வாரிசுகளுக்கு அவர்கள் தாய்மொழி தெரியவில்லை என்று அர்த்தம். ஒட்டுமொத்த உலக மக்களையும் டி.என்.ஏ, நிறம், உருவம், மதம் போன்ற…