1) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல. இங்கு அரசன் என்பது அரசமரத்தைக் குறிக்கும். பொதுவாகப் பெண்கள் குழந்தைப் பேறு வேண்டி அரசமரத்தை சுற்றுவது வழக்கம். அரசமரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. என்னதான் நம்பிக்கையுடன் அரசமரத்தை சுற்றினாலும், கணவனை சுற்றி வந்தால்தானே குழந்தை பிறக்கும். கணவனை சுற்றாமல், அரசமரத்தைச் சுற்றுவதில் ஒரு பயனில்லை என்பதை உணர்த்தச் சொல்லப்பட்டதுதான் இந்தப் பழமொழி. “அரசனை நம்பி, கட்டியக் கணவனைக் கைவிட்டுப் போனவள்” என்று ஒரு இழிவான தகவலைப்…