வந்தாரை வாழவைத்து நீமட்டும் வீழ்ந்தாய் – நம்
தாய்மண்ணின் தமையர்தமை தரக்குறைவு செய்தாய்
செய்ததெல்லாம் தவறென்று இன்றாவது உணர்வாய் – வீண்
சாதிமத பேதம் விட்டு ஓரினமாய் இணைவாய்
இணைந்த பின்பு இத்தரணியில் எதிரியேது உனக்கு – இனி
பணிந்து நிற்கும் ஏழுலகும் தமிழர்தம் வாளுக்கு
வாளெடுத்து வீழ்ந்ததில்லை என்றும் நம்மினமே – பெரும்
தோளெடுத்து பொங்கியெழு பகைவர் அஞ்சிடவே
அஞ்சுவதால் நாமடைந்த நன்மையேதும் இலையே – கண்
துஞ்ச மறு தாய்நிலத்தின் விடுதலையைப் பெறவே
பெற்ற மண்ணைப் பறிக்க வந்த பகைவரைக் கருவறுப்போம் – நம்
உற்றவரைத் தொட்டவனைக் கொடுவேல் கொண்டு களைவோம்
களை இரண்டே தமிழருக்கு ஒன்றதில் திராவிடமே – நம்
குலமழித்த ஆரியமும் அதன் பெரும் கூட்டணியே
கூட்டணியாய் கூடிநிற்போம் நாம் தமிழரென்றே – பகை
எட்டிநிற்கும் வேட்டையாடும் வேங்கை நமைக்கண்டே
நமை மீட்டெடுக்க நமக்கிருக்கும் நல்வாய்ப்பு தேர்தல் – இன்று
படையெடுத்துக் கிளம்பிடு உன் வாக்கு ஒன்றே மாறுதல்.
Like this:
Like Loading...
Related
Published by ராஜேஷ் லிங்கதுரை
ராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உனக்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது.
பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். பிறந்ததும் பிழைப்பதும் வேறுவேறு இடம் என்பது சங்ககாலத்தில் இருந்தே தமிழர்களுக்கு பழக்கமான ஒன்றுதான். தற்போதைய உறைவிடம் சென்னை என்றாலும் அதுவும் மாற்றத்துக்கு உட்பட்டதுதான்.
View all posts by ராஜேஷ் லிங்கதுரை